Wednesday, 23 October 2013

ரோமியோ மற்றும் ஜூலியட்:

 
 
 
      எந்த ஒரு காதல் செய்யும் ஜோடிகளும், இந்த சோகமான மற்றும் மறக்க முடியாத காதல் கதையைப் பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். இந்தகதையில் இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையாகவும், பைத்தியமாகவும் காதலித்து, இறுதி வரை தங்கள் காதலுக்காக தைரியத்துடன் போராடியது, அழியாமல் மக்கள் மனதில் உள்ளது.


காதலர்களின் பெயர்களின் வரிசையில் மிகச் சிறந்த இடம் என்றுமே ரோமியோ மற்றும் ஜூலியட்டிற்கு இவ்வுலகினில் உண்டு.இது மொழிபெயர்ப்பு நூல் எனினும் இந்நூலினை படிக்கையில் தமிழ் மொழிக்கே உரித்தான அழகு தமிழில், எளிமையான வார்த்தைகளில்
அமுதுதமிழ்ச் சுவை பொங்க பகிர்கிறார், இந்நூலினை அளித்த தாந்தோன்றிக் கவிராயர்.

இக்கதையில் வரும் நிகழ்வானது, நமது தேசத்திற்கு வெளிய நடக்கும் நிகழ்வினைக் கொண்டது எனினும் இந்நூலினை படிக்கையில் கொஞ்சி விளையாடும் தமிழால் ஒரு வேளை இங்குதான் நடந்தேறி இருக்குமோ என்று நினைக்க வைக்கிறார், இதன் ஆரியர்.

பகைமை குடிகொண்ட இரு குடும்பத்தின் இதயங்களுக்கு இடையே காதல் கொண்ட இரு நெஞ்சங்கள் தவிக்கும் தவிப்பினை சேக்ஸ்பியரின் மூளையில் உதித்திட்ட இக்கதையினை தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்புகளால் எடுத்து வைக்கிறார், இதன் ஆசிரியர்.

படித்தப் பிறகு பஞ்சணையில் துயில் கொள்ளும் தருணத்திலும் காதல் கவிகள் கொஞ்சி விளையாடும்.உங்கள் வீட்டின் முகட்டில் என் அழகு தமிழால்,என் செந்தமிழால். அப்படிப்பட்ட சிறப்புமிக்க கதையினை தமிழ் மொழியில் படித்து, அச்சுவையை பெற இங்கு சொடுக்குங்கள் (2.80 MB)

http://eegarai.info/?p=428

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…



2007 இல் வெளிவந்த கொரியன் படமான இந்த My Love, நான்கு காதல்களையும் ,ஒரு destiny day யையும் பற்றியது.
My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.03.41_[2010.08.22_18.34.25] கைகூடாத காதலினால் தவிக்கும் சே ஜின் (Se Jin),தனது வீட்டு ஜன்னலில் தனது காதலி ஜூ வோன் (Joo Won) பதித்து விட்டுச் சென்ற ஓவிய முத்திரையைக் கண்டவாறே,தனது மனதில் அவள் பதித்துவிட்டுச் சென்ற ஞாபக முத்திரைகளைக் கிளருகிறான்.அழித்துவிடக் கூடாது என்று உறுதிவாங்கப்பட்ட ஓவியத்தின் முன் நின்று,தன்னால் அழித்துவிடவே முடியாத அவளுடைய நினைவுகளை அசை போடுகிறான்.
“காதலும் காற்று போன்றதே.எந்நேரம் எப்படி வீசும் என்று இரண்டிற்கும் தெரியாது “ என்ற கவித்துவமான வசனத்தோடு ஆரம்பிக்கிறது இந்தப் படம்.
My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.03.03_[2010.08.22_18.13.12] இப்போது ஒரு ரயிலில் ஓட்டுனராகப் பணிபுரியும் ஜின்,சில வருடங்களுக்கு முன்,அதே ரயிலில் தனது காதலியை சந்தித்து இருக்கிறான்.அவர்கள் சந்தித்த ரயில்நிலயங்களை எல்லாம் கடந்து செல்லும் அவனால்,அவர்களது சந்திப்புகளைக் கடந்து செல்ல இயலவில்லை.
அயல்நாடு சென்றாலும்,தனது இதயத்தின் ஒரு பாதியை சியோல் நகரில் தொலைத்துச் சென்றவன் ஜின் மன் (Jin-man).அயல்நாடு செல்லும் போது,தனது காதலி கதறிக்கொண்டே “நீ செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால்,எனது நெஞ்சத்தின் இப்போதைய நிலை போல அல்லாது,பிறர் நெஞ்சங்களை இதப்படுத்து.” என்று சொன்னதற்காகவே “Free hugs” தந்து பிறரின் நெஞ்சங்களில் அன்பை விதைப்பவன் அவன்.
அவனுடைய காதலி,அவர்கள் பிரியும் போது,ஆறு வருடங்களில் நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணத்தின் போது,மறுபடி தாங்கள் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்ற கூறிவிட்டுப் பிரிகிறாள்.அதனை எதிர்பார்த்து மறுபடியும் கொரியாவின் சியோல் நகரம் வரும் அவன் புதியதொரு பிரச்சனையை சந்திக்கிறான்.
தனது முந்தைய செல்பேசி எண்ணின் இணைப்பு துண்டிக்கப்பட்டு,அது இப்போது வேறு ஒருவரின் பயன்பாட்டில் உள்ளது என அறியும் அவன்,தனது காதலிக்குத் தெரிந்த ஒரே எண்ணான அதை திரும்பப் பெற விழைகிறான்.
ஆனால் செல்பேசி நிறுவனத்தினர் கைவிரிக்கவே,அந்த எண்ணை தற்போது உபயோகித்துக் கொண்டு இருக்கும் சூ ஜியோங்(Soo Jyeong) ஐ சந்திக்கச் செல்கிறான்.
முழு சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒரு பெரிய கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து,அதனை தான் வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் நடந்த நினைக்கும் அவளும்,காதலின் பிடியில் ஆழ்ந்து உழல்பவளே!
தன்னுடன் வேலை பார்க்கும் கிம் என்பவனைக் காதலிக்கிறாள் ஜியோங்.ஏற்கனவே My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_00.47.38_[2010.08.22_18.11.00]காதல் மணம் புரிந்து,மனைவியை இழந்து தவிக்கும் கிம் ,அவளை ஏற்கத் தயாராயில்லை.இறந்து போன தனது மனைவியின் நினைவில் ஆழ்ந்து,ஜுங்கின் காதலையும் இறக்கச் செய்யும் செயல்களில் ஈடுபடுகிறான் கிம்.ஜுங்கை ஏற்கத் துணியாத அவன்,அவளை தன்னிடம் இருந்து தூரப்படுத்தவே விழைகிறான்.
தூரத்தில் இருந்து அவதிப்படும் ஜுங்,தூரத்தில் இருந்து வந்திருக்கும் ஜின்னுக்கு உதவ விளைகிறாள்.
காலேஜில் படித்துக்கொண்டு இருக்கும் சோ ஹியோன் (So Hyeon) ,உடன் பயிலும் ஜி வூ (Ji Woo) வை விரும்புகிறாள்.கொரியக் கலாச்சாரத்தில் கலந்து இருக்கும்,விழாக்களில் டிரிங்க்ஸ் சாப்பிடும் பழக்கம்,மது அருந்தத் தெரியாத ஹியோனிற்கு ஒரு தொல்லையாகவே இருந்து இருக்கிறது.இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு,இதனைக் கற்றுக்கொள்ளவும் ,வூவுடன் நெருக்கமாகவும் அவனை நெருங்கி My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.12.25_[2010.08.22_18.13.46]அவனது உதவியைக் கோருகிறாள் ஹியோன்.
நாளடைவில் அவனுடன் நெருக்கமாகும் அவள்,அவனுக்கு நல்லதொரு தோழியும் ஆகிறாள்.வூ தனது முன்னாள் காதலியின் நினைவில் தவிப்பதைக் காணும் அவள்,அருகில் இருந்தும் எட்ட இயலாத வானவில்லைப் போன்ற தன் காதலை எண்ணி மருகுகிறாள்.
இந்த நால்வரின் கதைகளையும்,அந்த முழு சூரிய கிரகண நாளை நோக்கிப் பயணிக்கும் இவர்களது காதல்களையும் பற்றிய அழகிய தொகுப்பே இந்தக் கதை.
எப்போதும் கனவு உலகில் வாழ்ந்த தனது முன்னாள் காதலியை உணரும் பொருட்டே தாங்கள் பயணம் செய்த ரயிலில் ஓட்டுனராக பணிபுரியும் சே ஜின்,அருகே இருந்தாலும் எட்டாத தூரத்தில் இருக்கும் காதலைக் கண்டு மருகும் ஜியோங் மற்றும் ஹியோன் ,தொலை தூரத்தில் இருந்து வந்து தொலைந்த காதலை தேட விளையும் ஜின் என இவர்களை எல்லாம் துன்புறுத்தும் காதல்,இவர்களை அந்த குறிப்பிட்ட நாளை நோக்கி தேடல்,சந்தோசம்,வருத்தம்,சுகநினைவு,எதிர்பார்ப்பு என்ற கலவையான உணர்ச்சிகளின் துணையோடு நடை போட வைக்கிறது.
My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_00.51.56_[2010.08.22_18.11.46] கிம் தன்னை மறுத்து வெளியே அனுப்பிய பின்,அவனது வீட்டில் இருந்து அழுதுகொண்டே வரும் ஜியோங், “வானம் இன்று அருமையாக இருக்கிறது” என்று கூறிக்கொண்டு,தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயல்வதும்,இயலாமல் போனதும் “I need a drink” என்று சொல்லி அடுத்த காரணத்தை தேடுவதும் நெஞ்சைப் பிழியும் காட்சி.
My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.21.56_[2010.08.22_18.14.26]
My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.21.59_[2010.08.22_18.14.29]




பூட்டிய ரயிலினுள் தூங்கிக் கொண்டிருக்கும் ஜூ வை நோக்கி நகரும் கரும்புகையோடு சேர்ந்தே நகரும் மரணமும்,My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.44.36_[2010.08.22_18.15.20]
எப்போதும் கற்பனையில் மூழ்கி இருக்கும் காதலியைக் குறைசொல்லும் சே ஜின்,பின்னர் கற்பனையிலேயே அவளோடு வாழ்வதும்,

My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.41.01_[2010.08.22_18.15.01] தன் காதலைத் தேடி ரணப்பட்ட மனதோடு சுற்றும் ஜின்,பிறர் நெஞ்சங்களை இதப்படுத்த முயல்வதும்,கடைசிக் காட்சியில் ,அந்தத் திருவிழாவில் காதலின் வலியோடு பிறருக்கு அன்பின் இதத்தை அளிப்பதும் நெஞ்சை நெகிழ்த்தும்.
காதல் என்பது என்ன?எதனால் இது வருகிறது?கோடானு கோடி மக்கள் இருக்கும் இந்த பூமியிலே குறிப்பாக ஒருவருக்காக உயிரையும் கொடுக்கத் துணியும் அளவுக்கு மாயம் செய்யும் அதன் மந்திரம் தான் என்ன?காதலர்களின் நெஞ்சில் மென்சோகத்தையும்,மெல்லிய சந்தோஷ ரேகயயையும் படரச் செய்யும் காதலின் கரங்கள் எப்பேர்ப்பட்டவை ?
ஜியோங்கிடம் பேசும் போது ஜின் சொல்லுவான், “வானத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் அவை நிலை மாறிக் கொண்டே இருக்கும்.ஆனால் துருவ நட்சத்திரம்(North star) அவ்வாறானது அல்ல.அது எப்போதும் ஒரே இடத்தில் தான் இருக்கும்.
நாம் கொடுத்து வைத்தவர்கள்.நம் உயிருக்குயிரான நபர்கள் நமது நெஞ்சில் அந்த துருவனைப் போல நிலை கொண்டு இருக்கிறார்கள்” என்று.
அவன் சொல்ல வந்தது, ‘எப்போதும் மாறிக்கொண்டு இருக்கும் வாழ்க்கையில்,மாறாத அன்பை அனுபவிக்கப் பெற்றவர்கள் காதலர்கள்’ என்பதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.காதலின் கரங்கள் அத்தகையதே...
My Love – காதலர்களுக்கு மட்டுமல்லாது,அன்பைத் துதிப்பவர்களுக்கும்...

Tuesday, 22 October 2013

காதலில் உங்கள் குணம் எப்படி..?

காதலில் உங்கள்  குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.

உ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2+9=11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

 லவ் நம்பர் ஒன்று ==>>சின்னம் ==>மான்

பெண்ணுக்குரிய குணம் ==>> வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்

ஆணுக்குரிய குணம் ==>> காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி jgகாண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்

லவ் நம்பர் இரண்டு ==>> சின்னம் ==>> பட்டாம்பூச்சி
பெண் ==>> கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.

ஆண் ==>> நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.

லவ் நம்பர் மூன்று ==>> சின்னம் ==>>மீன் தின்னி பிராணி}{otter}

பெண் ==>> ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

ஆண் ==>> ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்

லவ் நம்பர் நான்கு ==>> சின்னம் ==>> தேனீ

பெண் ==>> உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.

ஆண் ==>> நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடையவர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

லவ் நம்பர் ஐந்து ==>> சின்னம் ==>> குருவி

பெண் ==>> பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர்.

இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு

சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.

ஆண்   ==>>  பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்! .

லவ் நம்பர் ஆறு ==>> சின்னம் ==>> வாத்து

பெண் ==>> குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

ஆண்  ==>> காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

லவ்நம்பர்  ஏழு  ==>> {சின்னம் ==>>ஆந்தை}

பெண்  ==>> உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற்றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.

ஆண் ==>>சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.

லவ்நம்பர் எட்டு ==>> சின்னம் ==>>எறும்பு

பெண் ==>> களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

ஆண் ==>> காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூக‌அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

லவ் நம்பர் ஒன்பது ==>>சின்னம் ==>>கீரிப்பிள்ளை

பெண் ==>> இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.

ஆண் ==>>உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உங்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்

நட்பு காதலாக மாறிவிட்டது என்பதற்கான அறிகுறிகள்!!!

 
 
இவ்வுலகில் நட்பு இல்லாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதேப்போல் காதல் இல்லாதவர்களும் இருக்கவேமாட்டார்கள். ஆனால் இந்த நட்புக்கும் காதலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்னவென்றால், பல காதல்கள் நட்பிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அதிலும் ஒரு பெண்ணும் ஆணும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டால், நாளடைவில் அந்த நட்பானது காதலில் வந்து, திருமணத்தில் முடிந்து விடுகிறது. இத்தகைய காதல் நட்பிலிருந்து வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அதிகப்படியான அன்பு, புரிதல், நம்பிக்கை, ஆறுதல், அக்கறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை சற்று அதிகமாகிவிட்டால், அந்த நட்பானது காதலில் விழுந்துவிடுகிறது. பெரும்பாலுடம் நட்பாக பழகும் பெண்களின் மனதில் காதல் வந்துவிட்டால், அதனை மறைக்காமல் வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள். ஆண்களோ அதனை மறைப்பார்கள். அதேப் போன்று சில பெண்களும் மறைப்பார்கள். ஆனால், அவர்களின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் தெரியும். இப்போது நட்புடன் பழகும் ஆணின் மனதில் காதல் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஒருசில அறிகுறிகள் உள்ளன. அது என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!! நட்பு காதலாக மாறிவிட்டது என்பதற்கான அறிகுறிகள்!!! * முதல் அறிகுறி என்னவென்றால், காதல் வந்துவிட்டால், பேசும் விதம் மற்றும் பார்க்கும் பார்வையில் மாற்றங்கள் தெரியும். உதாரணமாக, நட்புடன் இருக்கும் போது தொனதொனவென்று கண்டதை பேசும் ஆண்கள், காதல் வந்துவிட்டால், எதிர்காலத்தைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அதிலும் வரப்போகும் மனைவியைப் பற்றி அதிகம் பேசுவார்கள். அதுமட்டுமின்றி, கண்களை பார்த்து பேசவே வெட்கப்படுவார்கள். * சில ஆண்கள் திடீரென்று தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தையும் வெளிப்படையாக சொல்லவோ அல்லது பேசும் போது செல்லப் பெயர் வைத்து அழைக்கவோ ஆரம்பிப்பார்கள். * நட்பாக பழகும் போது இருந்த அக்கறையை விட, காதலுக்கு பின் அக்கறை அதிகமாக வெளிப்படும். உதாரணமாக, அடிக்கடி போன் செய்து எங்கு இருக்கிறாய், என்ன செய்கிறாய், ஏன் வீட்டிற்கு சென்றதும் போன் செய்யவில்லை என்று பல கேள்விகளை கேட்டு, அன்பை வெளிப்படுத்துவார்கள். * முக்கியமாக நட்பாக இருக்கும் போது, எப்போதும் பொது இடங்களில் அதிகம் தொட்டுப் பேசாதவர்கள், காதல் வந்த பின்னர், வெளியே சுற்றும் போது கைகளைப் பிடித்துக் கொண்டு வருவார்கள். ஏன் என்று கேட்டால், பிடிக்கக்கூடாதா? என்று கோபப்படுவது போல் கேட்பார்கள். * குறிப்பாக மற்ற பெண் தோழிகளிடம் நடந்து கொள்ளும் விதத்தை கவனித்தால் நன்கு வெளிப்படும். அதுவும் உங்களுடன் நடந்து கொள்வது போன்றே மற்றவர்களிடம் நடந்து கொண்டால், அங்கு காதல் இல்லை. ஆனால் அதுவே வித்தியாசம் தெரிந்தால், நிச்சயம் காதல் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேற்கூறியவையே நட்பானது காதலாக மாறிவிட்டது என்பதற்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் அனைத்தும் பெண்களுக்கும் பொருந்தும்.

Read more at: http://tamil.boldsky.com/relationship/2013/07/hints-that-your-friendship-has-turned-to-love-003599.html

Monday, 21 October 2013

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?



1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.

3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???


ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???
1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.
2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.
3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.
4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு, பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.
5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.
6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.
7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.
8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.
9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.
10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.
# சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்

காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?


                                                         
[ உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.
இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.
முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே! ]
காதல் என்றால் என்ன?  
எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’ - இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!
காதல் செய்யும் மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல் இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர்.
பருவ மாற்றம் காரணமாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும் இனக்கவர்ச்சி. ஆகவே திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஈர்ப்புத்தான் உண்மையான காதல் என்று தாளாரமாகச் சொல்லலாம்.
காமம் என்பதில் காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை. காமம் என்பது காதல் ஆகாது. ஆனால் காதலில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. அது ஒரு சிலருக்கு பெரும்பகுதியாகவும், சிலருக்கு முழு பகுதியாகவும் அமையலாம். திருமணத்திற்குமுன் ஏற்படும் காதல் பெரும்பாலும் காமத்தை நோக்கியே நகரும். இல்லையென்று சிலர் மறுத்தாலும் உண்மை அதுதான் என்பது எதார்த்தம்.
ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றவதாக (அவர்களைக்கெடுப்பதற்காக) ஷைத்தான் அங்கு நிச்சயம் இருப்பான் என்னும் இஸ்லாமிய கண்ணோட்டம் மிகவும் சரியானதே என்பதை விஞ்ஞான ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.
ஒரு ஆணும் பெண்ணும் பேசும்போது அவர்களுக்குள்ள இடைவெளியைப்பொருத்து அவர்கள் கெடுவதற்குள்ள வாய்ப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ஒரு அடி இடைவெளிக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நான்கு முறை அருகருகே நின்று பேசினால் கெடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார்கள்.
ஆகவே அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை போன்ற காதலே உன்னதமானது. இந்த உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!
திருமணத்துக்குமுன் காதலா...
கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன் பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும் காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்.
குடும்பத்தை பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிலகிற்கு இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.
பொழுதுபோக்கிற்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான் அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள். பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல் என்று கூறிவிடலாம்.
சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.
இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும், காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே இயல்பான காதலின் ஆணிவேர். காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம் நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். (அது உங்கள் மனைவியாக இருக்கட்டுமே) பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். அதுபோலவே ஓர் ஆணின் புற அழகை பார்த்தே பெண்கள் காதலுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த அழகு அவர்களுக்கு பிடித்திருக்கும் அவ்வளவுதான். இவையத்தனையும் போலியான காதல்.
உண்மையான காதல்
உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது, இருக்க வேண்டியது. உங்கள் உண்மையான காதலி உங்கள் மனையாகவே இருக்கட்டும். ஆகவே மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்; ''உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!'

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி தெரியாத சில மர்மங்கள்!

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடா து. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரி யாது. சொல்லப்போனால் ஆண்கள் நிறைய விஷ யத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவ ர்கள். அவை என்னென்னவென்று சிறிது பார்ப் போமா!!!
1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடி க்கும். சமைப்பதில் பெண்கள் தான் மிகவும் சிறந் தவர்கள் என்று யார் சொன்னார்கள்? சமையல றை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண் மைதான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்க ளை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத்து உண்ணும் ஆண்களின் சமையல் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமையல், அவர்க ளது மன நிலையைப் பொறுத்ததே ஆகும்.
2. பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஆண்கள் அனைவரும் ‘பெண் கள் உணர்ச்சி வசப்பட்டால் அழுவார்கள்’ என்று சொல்கின்றனர். உண்மையில் ஆண்களே உணர் ச்சிவயப்பட்ட வர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். பெண்க ள் ஏதேனும் ஒரு கஷ்டம் என்றால் அழுது வெளிப்படுத்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.
3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்பு றுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு காரணம் இரு க்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல் ஸ் அல்லது பேசும் விதம் போன்றவற்றை வைத் து துன்புறுத்துவதில் மிக வும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களது ஒரு வகையான அன்பை வெளிப்படு த்தும் விதம் ஆகும். ஆ னால் அவ்வாறு செய்வது ஒரு அன்பின் காரண மாக என்று நிறைய பெண்க ளுக்கு தெரியாது.
4. நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனை வருக்கும் காம உணர்வு அதிகம், அவர்கள் எப் போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பர். ஆனா ல் உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை, அவர்களது ஹார்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண்டுகிறது. இது நிறைய ஆராய்ச்சியில்கூட நிரூபிக்கப்பட்டுள்ள து.
5. ஆண்களுக்கு வாயாடுவது என்பது பிடிக்காது எ ன்று நிறைய பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வளவாக வாயாட வில்லை என்றால்கூட ஓரளவாவது வாயாடுவர். அதிலும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப்பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.

உண்மையான காதல், இயல்பான காதல் எது தெரியுமா?

காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளை யாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோ ஜன், அட்ரினலின் போன்ற சுரப்பி களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர் கள். அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறு ப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல் பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும்.
அதன்பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகித த்தில் கலந்திருப்பதே உண்மை யான காதலாகும்.. காதல் என்பது பாலியல் ரீதியானதாக வே இருக்கவேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள், குழந் தை கள், உறவி னர்களுடன் நீங்கள் மன ரீதியாக சாதகமான தொடர்பு களைக் கொண்டிருக்கும் போது, மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள். இத்தகைய மதிப்பு வாய்ந்த காதலா ல் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப் பட்டு ள்ளது.
மன விரக்தி:
காதல் சூழலில் வாழ்பவர்களுக்கு மன விரக்தி மற்றும் உள ரீதி யான துன்பங்கள் வருவது குறைவு என்கி ன்றன ஆய்வுகள். மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியு றுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையா வதும் அதிகம். அதே போல தனிமை ப்பட்டவர்கள் மன விரக்திக்கு ஆளா வது அதிகம் என்பதை பல ஆய்வு கள் தெளிவாகச் சொல்லியிருக்கி ன்றன.
மனப்பதற்றம்:
புதிதாக காதல் வயப்பட்டவர் களைவிட நீண்டகாலமாக நேசமான உறவில் இருப்பவ ர்களுக்கு மனப் பதற்றம் ஏற்படுவது குறைவு என கண் டறியப்பட்டுள்ளது. MRI பரிசோ தனைகள்மூலம் மூளையின் பகுதிகளை பரி சோதித்ததில் இது தெரிய வந் துள்ளது.
வலிகளைத் தாங்கும் தன்மை:
மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு உடல்வலி, தலை வலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளை யின் பகுதி அதிகமாகச் செயற் பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்ப தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள் ளனர்.
ரத்த அழுத்தம்:
மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்க ளைவிடக் குறைவாக இருக்கிறது. தனியாக இருப்பவ ர்களுக்க சற்று அதிகமாகவும் உள்ளது. மண முடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ் வதே முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
காய்ச்சல் அதிகம் வராது:
காதல்வயப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். இதனா ல் காய்ச்சல்போன்ற தொல்லை கள் அடிக் கடி ஏற்படாது. சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீண்ட ஆயுள்:
தனித்து இருப்பவர்களைவிட திரு மணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். திருமண உறவால், பரஸ்பர ஆதரவும், பிள்ளைகளின் உதவியும், நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்குமேலாக தாம் காதலிக்கப்படு கிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல் நலத் தையும் நீடித்த வாழ்வையும் கொடு க்கிறது.
காதலின் மிகப்பெரிய கொடை:
குடும்ப வருமானத்தையும் வாழ்க் கை வசதிகளையும்விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மன மொத்த காதலும் முக்கியமானது. அது ஆரோக்கியத்துடனும் தொடர் புடையது. இவை வெற்று வார்த் தைகள் அல்ல விஞ்ஞான பூர்வமா கவும் நிறுவப்பட்டுள் ளது என்பதைப் புரிந்து கொள் ளுங்கள்.
THANKS TO vidhai2virutcham

Friday, 18 October 2013

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை.
எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே.
இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )


3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)


5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.


7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)


8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)


9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)



10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.


இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க.

உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

--
ஆதம்
சிறகுகள் கிடைத்தவுடன் பறப்பதல்ல நட்பு...
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதே நட்பு...

ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...

1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.

2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து வாங்குவாள்.

4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.

5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன் "சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...

6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)
7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு, கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....


8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.

9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்" எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?

10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.

12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

13) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)

14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் வரும்.

இப்போதைக்கு இது போதும்.... அடுத்த பதிவுல இன்னும் இதைப்பத்தி பேசுவோம்

காதலில் வெற்றி பெற டிப்ஸ் ...

       மூன்று எழுத்து கெட்ட வார்த்தை 'காதல்'என்றாகிவிட்டது. இன்றைய சமுகத்தால்  இளைஞர்கள் காதல் என்ற வார்த்தைக்கு தவறுதலான அர்த்தம் கொண்டுள்ளனர்.  ஆண், பென் இனக் கவர்ச்சி ...,உடற்கவர்ச்சியின் ஈர்ப்பு  ...என்பது காதலாகி போனது. தயவு செய்து அன்பு உள்ளம் கொண்ட அன்பர்களே ,காதலை தவறுதலாக நினைக்காதீர்.
       அன்பின் உச்ச நிலையின் வெளிப்பாடு காதல் ஆகும். அன்பு யார் மீதும் வரலாம் . அன்பு சுயநலம் இல்லாத ஒன்று. உண்மையான அன்பு உடல் சம்பந்தம் பட்டது அன்று. அன்பு பெருகி காதல் ஆகும் போது , யாரை காதலிக்கிறோமோ ..அவர்களின் நலமும் , மகிழ்ச்சியும் தான் காதலிப்பவரின் குறிக்கோளாக இருக்கும் .அதுதான் 'காதல்'  ஆகும்.

       இறைவனிடம் காதல் கொண்ட கதைகள் பல . ஆண்டாள் ,மீரா...போன்றோர்கள் காதலித்தார்கள் .பெண்கள் இறைவனை மனிதனாக பாவித்து காதலித்தார்கள்.  அதுபோல திருஞான சம்பந்தர் போன்றோர்கள் பெண்ணாக இறைவனை பாவித்து காதலித்தனர். அதுபோல் காதலுக்கு வயது தடையல்ல....'முளைச்சு மூணு  இலை விடல ...இவனுக்கெல்லாம் காதல் ஒரு கேடா...' என பலர் திட்டி பார்த்து இருக்கிறோம். திருஞான சம்பந்தர் தனது ஐந்து வயதில் இறைவனை காதலனாக நினைத்து பாடுகிறார். அப்பாடலில் தன் காதலன் சிவ பெருமானை பிரிந்த துயரத்தால் தனது உடல் இளைத்து , கைவளையல்கள் கையிலிருந்து நழுவி விட்டதாகப் பாடுகிறார்.

         பெண் அடியார்கள் இறைவனை காதலிக்கலாம் .ஆனால் , எப்படி மாணிக்கவாசகர் போன்ற ஆண்கள் இறைவனை காதலானாக ஏற்பது ? ஏற்க்க முடியுமா ? என்ற வினாவிற்கு மீரா ஒரு சாதுவிடம் கூறிய பதில் ...
      
          மீரா ஒருமுறை ஒரு சாதுவை சந்திக்க சென்றிருந்தார். அப்போது அவர், 'தான் பெண்களை பார்ப்பது கிடையாது' என்று கூற . ..மீரா அதற்க்கு ,"இவுலகில் கண்ணன் ஒருவனே ஆண். மற்றவர்கள் எல்லாரும் அவனை அடையக் கூடிய பெண்களே...
உங்கள் குருவிற்கு இன்னும் தன் ஆண் என்ற பேத உணர்வு இருக்கிறதே.."கூறினாராம்.

         இறைவனிடத்தில் தோன்றிய இந்த காதல் , அன்பின் நம்பிக்கையாய் இன்று வரை அனைவரிடத்திலும் நிலவுகிறது. "'எதிர்பார்த்து' கொண்ட அன்பு 'காதல்' அல்ல...அது 'கருமாந்திரம்' .அன்னை மகன் மீது கொண்ட அன்பு எதிர்பார்க்காத அன்பு ஆகும். ஆசிரியர் மாணவன் மீது கொண்ட அன்பு அவன் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. உண்மையான காதல் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறது. உண்மை. கண்ணன் ராதையின் மீது கொண்ட அன்பு நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.நான் கூறும் மேரியின் அன்பினை      பாருங்கள், காதலின் மகிமை புரியும் . காதல் உண்மையானால் அது நிலைக்கும் , நீங்கா புகளைத்தரும் .., வெற்றியினை தேடி தரும் ...ஆதலினால் காதலிப்பீர்.

    பிரான்ஸ் நாட்டில் நடந்த உண்மை காதல் கதை. ஒரு ஆயாவின் கதை . பதினெட்டு வயது இளம் ஆயாவின் கதை.பணி செய்ய வந்த இடத்தில் அவளின் அன்பை பெற்றான் வீட்டின் மூத்த பையன்  .காதல் என்றால் வில்லன் இல்லாமலா..,"அண்ணலும் நோக்கியால், அவளும் நோக்கினால், அவளின் அப்பாவும் நோக்கினார்...".விளைவு ..,கேவலப்படுத்தப்பட்டு ,வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டாள்.  வெளியேறிய மேரி ,பரிசுக்கு சென்று தனது நீண்ட நாள் கனவான விஞ்ஞான ஆராய்ச்சியை தொடர்ந்தாள். இருந்தும் தம் காதலனை புறக்கணிக்க வில்லை. விடா முயற்ச்சியினால் யுரோனிய எக்ஸ் கதிர் வீச்சை கண்டு பிடித்தாள். முடிவில் நோபல் பரிசும் பெற்றார்.
தன் காதலனையும் கரம் பிடித்தார். வைராக்கியம் , எதையும் எதிர்பார்க்காத தன்னலம் , ஆம்! சுயநலம் அற்ற அன்பு , அவள் காதலை வெறி பெறச் செய்தது.

        காதலிப்பவரே ..நீங்கள் காதலிப்பவரின் மகிழ்ச்சியில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

காதல் என்றால் என்ன? எவ்வாறு காதலிக்க வேண்டும்?


காதல் என்பது ஒரு வகையான தனித்த உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி, அப்படியெல்லாம் எதுவுமில்லை கிடையாது.காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு என்று பெரியார் கூறினார்.
ஜாதி மாறி காதலித்தால் கலாச்சாரம் மாறிவிடும். பண்பாடு கெட்டுவிடும். காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடு. காதலை ஒழிக்க வேண்டும். காதல் திருமணங்கள் எல்லாம் பணம் பறிக்க நடக்கும் நாடகத் திருமணங்கள் என்று பலர் நினைக்கின்றனர்.
முதலில் காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடா என்று பார்க்க வேண்டியுள்ளது.
இப்படிப் பேசுபவர்கள் அரிச்சுவடியே தெரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தமிழர் வரலாற்றில் காதல் ஒரு முக்கியமான பண்பாட்டுக்கூறு. தமிழ் இலக்கியங்களில் காதலைப் பற்றிப் பேசப்படாத, காதலைப் போற்றாத ஒரு இலக்கியத்தைக் கூட பார்க்க முடியாது. தமிழ் இலக்கியங்களில் அகநானூறு என்ற இலக்கியம் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றி, காதலைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது.
தமிழ் இலக்கியங்களில் உள்ளது அதனால் காதலிக்க வேண்டும் என்று பேச வரவில்லை. இலக்கியங்களில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனின் உணர்விலும் காதல் தோன்றியே தீரும். காதலை எதிர்ப்பவர்கள் வேண்டுமானால் அந்த உணர்வுக்கு காதல் என்ற பெயரை வைக்காமல் வேறு பெயரைக் கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் காதல் என்ற உணர்வுக்கு யாராலும் எதிர்வினையாற்ற முடியாது.
இன்று புத்தகங்கள், திரைப்படம் மற்றும் இணையத்தளத்தில் காதல் கருத்துக்கள் பல வழிகளில் வெளிப்படுகின்றது. ஆனால் உண்மையான காதல் உள்ளுணர்வோடு நாம் வைத்து பழகும்போது தான் அதை உணரமுடியும். சிலருக்கு காதல் செய்யும் போது, ஆரம்ப காலத்தைத் தவிர மற்ற நாட்களில் எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இல்லாமல், ஃபோர் அடிப்பது போன்று உணர்வார்கள். சிலருக்கு அதனாலேயே காதல் தோல்வி அடைந்துவிடும்.
எனவே அந்த மாதிரி காதல் இல்லாமல்,
எப்போதுமே காதலுடன் (ரொமான்ஸாக) இருக்க சில வழிகள்:
1. காதல் என்பது ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. அதிலும் காதல் சின்னங்களான ரோஜா, மெழுகுவர்த்திகள் மற்றும் சொக்லேட் மட்டுமே இதுவரை காதலில் ஒரு அறிகுறியை கொடுத்துள்ளது. உண்மையில் காதலிப்பவரை மகிழ்விப்பதற்கு, அவர்களின் காதல் உணர்வுகளைத் தூண்ட எது ஏதுவாயிருக்கும் என்று பாருங்கள். அவர்கள் எதை விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் காதலை வெல்ல அவர்களின் விருப்பங்கள், வெறுப்புகள் அறிந்து கொள்வது மிக அவசியம். மேலும் உங்களது உலகில் மற்றவரை விட அவர்கள் எத்தனை முக்கியமானவர் என்பதை நீங்கள் உணர ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் மனம் அவர் மீது அதிக கவனத்தை செலுத்தும். இவ்வாறு செலுத்தும் போது, அவர்களது ஒவ்வொரு செயலையும் ரசிக்கத் தோன்றும்.
2. நீங்கள் ஒருவர் மீது ஈர்ப்பு கொண்டு அந்த காதலை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் நீங்கள் அவர்களை கவர என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அவர்மீது ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என்பதை எப்படி வெளிபடுத்துவது? அவர்களை அன்பால் வெல்ல என்ன செய்ய வேண்டும்? என்பதை யோசிக்க வேண்டியது அவசியம். அவர்களின் அன்பு மற்றும் காதலை பெற முயற்சிக்க வேண்டும். நீங்கள் முன்னமே காதல் தோல்வி அடைந்தவரானால், அந்த தோல்வியைக் வெளிப்படுத்திக்கொண்டு ஒரு அனுதாபத்தை உண்டாக்கலாம். அப்படி செய்கையில் ஒரு காட்சியை உருவாக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் எத்தனை ஆசை வைத்திருந்தீர்கள், காதலில் எத்தனை நம்பிக்கை கொண்டிருந்தீர்கள் என்பதை விளக்கும் போது, உங்கள் மீது காதல் கொள்ள வாய்ப்பு உள்ளது.
3. காதல் செய்யும் போது ஆரம்பத்தில் எல்லாம் புதியதாக இருக்கும். ஆரம்பத்தில் உங்கள் காதல், உற்சாகத்தை மற்றும் உத்வேகம் கொண்டு, நீண்ட நாள் உறவைத் தொடர நினைக்கும். நீங்கள் ஒருவரை சந்தித்து அவர் மீது காதல் கொண்டு, மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க மனம் ஏங்கும் மற்றும் உங்கள் தொடர்பு நீடிக்க - நாளை என்ன நடக்கும்? அடுத்த வாரம் என்ன நடக்கும்? அடுத்த மாதம் என்ன நடக்கும்? அவர் உங்களை அழைப்பாரா? முத்தமிடுவாரா? அவர் வருவாரா? என்று பல உணர்ச்சிகளும் எதிர்ப்பார்ப்பும் நிகழும். இந்த உறவு உங்கள் வாழ்வில் ஒப்புக்கொண்ட பின், இது ஒரு வழக்கமான ஒன்றாக மாறிவிடும். அதனால் உங்கள் காதல் எப்போதும் புதிதான ஒன்றாக இருக்க வேண்டும் எனில், ஏதாவது புதிதாக செய்யுங்கள். ஆச்சரியப்படும்படி, எதிர்பார்க்கும்படி, அவர்களை என்றும் உற்சாகபடுத்தும் படி, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினால், உங்கள் காதல் எப்போதுமே சிறப்பாக இருக்கும்.
4. காதல் என்பது ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ அல்லது அது ஒன்றும் காசு கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த பொருளாகவோ அல்லது உயர்தரமானதாக இருக்க வேண்டும் என்பதோ இல்லை. உண்மையில், சில நேரங்களில், காதல் தருணங்கள் எளியதாகவும், மனதில் செய்ய வேண்டுமென்று தோன்றும் ஒரு உணர்வு. அதிலும் சில நேரங்களில் அந்த காதலை வெளிப்படுத்த "நான் உன்னை காதலிக்கிறேன்", "நான் உனது பிரிவால் வாடுகிறேன்" என்றெல்லாம் சொல்லி நம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். இல்லையெனில் அவர்களை மறைந்து நின்று பார்ப்பது, சத்தமாக காதலை சொல்வது, முத்தமிடுவது, கிண்டல் செய்வது, உணர்வை தொடும் வகையில் பேசுவது என்று காதலை வரம்பற்ற வழிகளில் வெளிப்படுத்தலாம். படைப்பாற்றல் மற்றும் வேடிக்கையாக செய்தல் மிகவும் அவர்களை ஈர்க்கும்!
5. வாழ்வில் நீங்கள் விரும்பியவரை பெருமைப்படுத்த அல்லது பாராட்ட, நீங்கள் உண்மையிலேயே அவர்களை உங்களோடு இருக்க செய்தல் வேண்டும். அவர்களை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ள, உங்களின் முழு முயற்சி எடுக்கும் பொழுது, அதில் அதிக சந்தோஷம் அடைவீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தொடர்ந்து பார்க்கும் போது, அதைவிட அற்புதமான சுழல் எதுவும் இல்லை. அவரை உங்களது வாழ்க்கை துணையாக அடைந்து உங்களின் அனைத்து உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள, நீங்கள் கொடுத்து வைத்தவர் என்பதை மனமானது ஞாபகப்படுத்தி, மீண்டும் உங்கள் வாழ்க்கையில் காதலை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
இவையெல்லாம் சில அனுபவங்கள் தான். காதல் அனுபவிக்க வேண்டியது. போற்றப்பட வேண்டியது. வளர்க்கப்பட வேண்டியது. ஜாதி ஒழிந்து சமத்துவ சமுதாயம் மலர, மனிதநேயம் தழைக்க ஜாதி கடந்த காதல் திருமணங்கள் தேவை.
ஆகவே காதலர்களே...! காதலை காதலோடு காதலியுங்கள்.